J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK

J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK

Share

We are a Old Student Association from Avarangal Nadarajah Ramalinga Vidyalayam.

25/05/2026

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடாத்திய வலயமட்ட சதுரங்க
போட்டியில்16 வயதுப் பெண்கள் பிரிவில் செல்வி நி கம்சாளினி மூன்றாமிடத்தையும் 16 வயது ஆண்கள் பிரிவில் சி சாலுதன்,
14 வயது ஆண்கள் பிரிவில் ஜெ ஜஸ்வின், க கயலவன் ஆகியோரும் 8 வயதுப் பிரிவில் ப அத்விகா ஆகியோர் வெற்றியீட்டி மாகாண மட்ட சதுரங்க போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இம் மாணவர்களைப் பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன், இவர்களை வழிநடத்தி வெற்றிக்கு வழி காட்டிய எமது பாடசாலையின் சதுரங்கப் போட்டி இணைப்பாளர் திருமதி நிலானி பரநிரூபன் அவர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

25/05/2026

முல்லைத்தீவில் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட 16 வயது ஆண்கள் அணியினர்.

வடக்கு மாகாண மட்டத்தில் முல்லைத்தீவில் நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த 16 வயது அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளனர்.

இம் மாணவர்களைப் பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் இவர்களுக்கு பயிற்சி வழங்கி வெற்றிக்கு வழிகாட்டிய எமது பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கும் பயணத்தில் உதவிய வரலாறு பாட ஆசிரியர், அலுவலகப் பணியாளர் ஆகியோருக்கும், ஒத்தாசை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

24/05/2026

முன்னை நாள் ஆசிரியை திருமதி ஜோகலக்ஷ்மி ஜெகநாதன் (யோகம் ரீச்சர்) அவர்களுக்கு நன்றிகள்.

பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திருமதி ஜோகலக்ஷ்மி ஜெகநாதன் (யோகம் ரீச்சர்) அவர்கள் 28000/= பெறுமதியான Automatic Bell System ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இது பாடசாலை நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் பிரயோசனமாக அமையும். இதை மனமுவந்து வழங்கிய ரீச்சருக்கு பாடசாலையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

21/05/2026

கோப்பாய் பிரதேச சபை பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கிலதின போட்டியில் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் விவரம் - 2026

1. N Nilusha (Grade 11) - Story Telling 1st Place
2. S Sainthavi (Grade 08) - Recitation 3rd Place
3. Haruthiha (Grade 10) - Recitation 3rd Palce
4. T Vithush - Creative Writing 1st Place
5. K Tharanika - Creative Writing 3rd Place
6. R Piruthubi - Oratory Prepared 2nd Place

இம்மாணவர்களைப் பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன், இவர்களை வழி நடத்தி வெற்றிக்கு வழி காட்டிய எமது பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர்கள் மூவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK's post 21/05/2026

செயற்படு மகிழ்வோம் 2026 ஆம் ஆண்டு நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்கள்.

09.05.2026 அன்று நடைபெற்ற வலயமட்ட செயற்படு மகிழ்வோம் நிகழ்வில் தரம் 3, தரம் 4 மாணவர்கள் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

பாடசாலைக்கு பெருமை சேர்த்த இந்த மாணவர்களை பாராட்டுவதுடன் இவர்களை பயிற்றுவித்த தரம் 3,4, 5 ஆசிரியர்கள், ஏனய ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், விசேட கல்வி ஆசிரியர்கள், ஆகியோருக்கும் பங்களிப்புச் செய்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

18/05/2026

ANRV OSA - Sri Lanka

18/05/2026

ANRV OSAW SWISS

18/05/2026

ANRV OSA UK

16/05/2026

வலய மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி நி.நிலுஷா

அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2026 பிரிவு - 3 இல் கவிதையாகத்தில்
செல்வி நி நிலுஷா வலய மட்டத்தில்
முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரைப் பாடசாலை சார்பாக பாராட்டிக் கொள்வதுடன், இவரை வழிநடத்திய தமிழ் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

09/05/2026

துயர் பகிர்கின்றோம் 🙏

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், அளவெட்டி மற்றும் Swiss Bern மாநகரை வதிவிடமாகவும் கொண்ட
எமது பாடசாலையின் பழைய மாணவனும் சுவிஸ் பழைய மாணவர் சங்க கிளையின் செயலாளருமாகிய அமரர் திரு ஸ்ரீதரன் நவரத்தினம் அவர்கள் இன்றைய தினம் (09.05.2026) சுவிஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

நாகநந்தினியின் அன்புக் கணவரும்,
சுகன்யா, பிரமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிக்கியின் அன்பு மாமனாரும்,

செல்வராணி (ராணி சுவிஸ்)
காலஞ்சென்ற ஶ்ரீபரன் (சின்னத்தம்பி) மற்றும் பாலராணி(பாலம்மா இலங்கை),
ஶ்ரீபாஸ்கரன் (கிளியன் சுவிஸ்), உதயராணி (உதயம் சுவிஸ்), பகீதரன் (பகீர் லண்டன்)
ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கோணேஸ்வரன், சீதாரட்ணம், தவக்குகன், ரோகினி, குணசீலன், சயரூபி,
சிவவதனி, சிவாஜினி,
உதயகுமாரி, முகுந்தன்,
துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
நந்தினி ( மனைவி)
+41 79 236 98 15
சுகன்யா ( மகள்)
00 41 (0) 79 254 25 68
மீனா ( மகள்)
+41 79 937 14 83
கிளி ( சகோதரன்)
00 41 77 940 64 51
குணா ( மைத்துணர்)
00 41 78 323 46 78
பகீர் ( சகோதரன்)
00447877 661474
ராணி( சகோதரி)
00 41 76 324 96 62
உதயம் ( சகோதரி)
+41 77 905 32 76
பாலம்மா ( சகோதரி)
00 94 (77) 554 3780
முகுந்தன் ( மைத்துணர்)
00447982 915768
தவக்குகன்(மைத்துணர்)
00 94 (77) 669 9687

05/05/2026

வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட எமது கரப்பந்தாட்ட அணியினர்….

2026 யாழ்ப்பாண வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த 16 வயது ஆண்கள் பிரிவு முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுள்ளனர், அத்துடன் 18 வயது ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். இம் மாணவர்களை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் அவர்களுக்கு கடுமையான பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்த பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் இவர்களுக்கு உதவிய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Want your school to be the top-listed School/college in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


London