06/06/2026
சஹாபாக்களின் வழியே நேர்வழி தொடர்-02
******
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُمْ بِهِ فقَدِ اهْتَدَوْا وَإِنْ توَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ .البقرة: 137
நீங்கள் எவற்றை நம்பிக்கை கொண்டீர்களோ அதேபோன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே அவர்கள் விடயத்தில் உமக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவன் நன்கறிந்தவன்(2:137)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் சஹாபாக் களின் ஈமானிய கொள்கையிலும் சுன்னாவின் செயற்பாட்டிலும் பயணிப்பதே ஈமானுக்கு பாதுகாப்பானது. நேர்வழிக்கு உத்தரவாதமானது. அந்த ஈமானிய கொள்கையையும் சுன்னாவின் செயற்பாட்டையும் எவர் நிராகரிக்கின்றாரோ அவர் முரண்பாட்லும் வழி கேட்டிலும்; தட்டுத்தடுமாறிக் கொண்டிருப்பார் என்பதை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بعْدِ مَا تبَيَّنَ لَهُ الْهُدَى وَيتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نوَلِّهِ مَا توَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا ) النساء: 115(
யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு முஃமின்களின் வழி அல்லாததைப் பின்பற்று கின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனைச் செல்ல விட்டு அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்ட தாகும்.(4:115)
இவ்வசனத்தில் 4 விடயங்களை அல்லாஹ் கோடிற்று காண்பிக்கின்றான்
* ``அல்உதா (الْهُدَى) எனும் நேர்வழியை, வஹியின் மூலம் (அல் குர்ஆனை மற்றும் சுன்னா வின் மூலம் ) அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.. அந்த நேர்வழியில் தான் ஈமானையும் இபாதத்தையும் உறுதிப்படுத்துகிறான்..
* அந்த நேர்வழியை நிராகரிக்கின்ற மற்றும் மறுக்கின்றவனை அல்லாஹ் கண்டிக் கிறான்.
* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காண்பித்த வழியில் பயணிக்கின்ற சஹாபாக்களை மூஃமின்கள் என்று நற்சான்று சொல்கிறான்.முஃமின்களான சஹாபாக்களின் வழியை அங்கீகரிப்பதாக அறிவிக்கின்றான்.
* சஹாபாக்கள் நபிகளாரிடமிருந்து எந்த வழியில் அகீதா (நம்பிக்கை கோட்பாடு ) மற்றும் இபாதத் (வணக்கவழிபாடுகளை)ஏற்று பின்பற்றினார்களோ அந்த வழியை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அந்த வழியில் செல்லுமாறு மக்களுக்கு கட்டளையிடுகிறான். அவர் களின் வழியில் செல்லாமல் வேறுவழியில் செல்பவர்களை நரகத்திற்குள் நுழைவிப்பதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
இமாம் ஸஃதி (ரஹ்)
அவர்கள் கூறும்போது:
تفسير السعدي . تيسير الكريم الرحمن (ص: 202)
{ويتبع غير سبيل المؤمنين} وسبيلهم هو طريقهم في عقائدهم وأعمالهم
முஃமின்களின் பாதை என்பது, அவர்களின் (அகீதா) நம்பிக்கைகள் மற்றும் (அமல்கள்) செயற்பாடுகளில் அவர்களை பின்பற்றும் பாதையாகும். (நூல்: தப்ஸீர் தைஸீருல் கரீமில் ரஹ்மான் பக்கம்202)
சஹாபாக்களுக்கு அல்லாஹ் வஹி இறக்க வில்லை.நபிக்கு இறக்கப்பட்ட வஹியின் நிழலில், அவர்கள் நேர்த்தியாக பயணித்ததை அறிவிக்கிறான்.
மேலும் அல்லாஹ் கூறும் போது
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ } يوسف: 108
இதுவே எனது நேரான வழி. நானும் என்னை பின்பற்றுபவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் இருந்து அல்லாஹ்வின் பால் (மக்களுக்கு) அழைப்பு விடுக்கிறேன். மேலும் அல்லாஹ் மிகத்தூய்மையானவன். நான் இணைவைப்பாளர்களில் ஒருவன் அல்ல என நபியே நீர் கூறுவீராக (12: 108)
எவ்வித சந்தேகங்களும் குழப்பங்களும் இல்லாத அல்லாஹ்விடமிருந்து வந்து தெளிவான சான்றினை (வஹியை) முன்வைத்து நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், நானும் என்தோழர்களும் அந்த சான்றின் மீது (வஹியின் மீது) நின்றவர்களாக அழைப்பு விடுக்கிறோம் என கூறுமாறு அல்லாஹ் நபிக்கு கட்டளையிடு கிறான்.
சஹாபாக்களின் வழி, வஹியின் அடிப்படையில் செப்பனிடப்பட்ட தெளிவான பாதையாகும் என்பதை இந்த வசனத்தின் மூலம் மீண்டும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்
சஹாபாக்கள் வஹியின் நிழலில் செயற்பட்டதால் தஃவா பணியினை மேற்கொள்ள –மக்களுக்கு மாரக்கத்தின் பால் அழைப்பு விடுக்க- தகுதிப் பெற்ற கூட்டமாக அவர்களை ஆக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் தூதுவர்களாகவும் ஆக்கினான். சஹாபாக் களிடத்தில் இல்லாத ஈமானிய நம்பிக்கைளையும் செயற்பாடுகளையும் எவரும் பின்பற்ற முடியாது. புதிதாக உருவாக்கவும் முடியாது. இது தான் கியாமத் நாள் வரை உலக முஸ்லிம்களுக்கான வழி என்பதை மிக துல்லியமாக அல்லாஹ் உலகிற்கு அடையாளம் காட்டுகின்றான். இவ்வாறான உத்தரவாதம் வேறு எந்தவொரு சமூகத்தாருக்கும் கொடுக்கப்பட வில்லை.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
03/06/2026
சஹாபாக்களின் வழியே நேர்வழி
சத்தியம் எது அசத்தியத்தியம் எது என பிரித்தறிவிக்கும் வழியை மக்களுக்கு தெளிவுப் படுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஒவ்வொரு இறைத்தூதர் மூலமும் அந்த வழியை அவர்களது சமூகத்திற்கு காட்டியது போலவே இந்த சமூகத் திற்கும் இறுதித் தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் காண்பித்தான். தனது தூதருக்காகவும் மார்க்கத்திற்காகவும் தேர்ந்தெடுத்த சஹாபா சமூகம் மூலம் அந்நேர்வழி யை இந்த மண்ணில் உறுதிப்படுத்தினான்.
அல்லாஹ்வின் வஹி நபிகளாருக்கு இறங்குவதை சஹாபாக்கள் நேரடியாக கண்டார்கள். நபிகளாருக்கும் சஹாபாக்களுக்குமிடையில் எந்த தடையும் இருக்க வில்லை. எந்த இடைத் தரகரும் இருக்க வில்லை. நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் அதன் விளக்கங்களையும் சொல்ரீதியாகவும செயல்ரீதியாகவும் அறிந்துகொண்டார்கள்
இந்த குர்ஆன் அவர்களது மொழியில் இறங்கியது. குர்ஆனின் ஒரு வசனம் எங்கே இறங்கியது? எப்போது இறங்கியது? யாருக்காக இறங்கியது? எந்த சூழு;நிலையில் இறங்கியது? அந்த வசனத்தில் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள் என்ன? அந்த சொற்களின் கருத்துகள் என்ன? அவ்வசனத்தில் பொதிந்துள்ள செய்திகள் என்ன? அதற்கான விளக்கம் என்ன? அந்த வசனம் ஒருநிகழ்வை குறித்து மட்டும் பேசுகிறதா? அல்லது பொதுவாக பேசுகிறதா? அந்த வசனத்திற்கு நபிகளார் கூறிய விளக்கம் என்ன? குறிப்பிட்ட ஒருவசனம் நடைமுறையில் இருக்கும் போது அதற்கு பதிலாக வேறொரு வசனம் இறங்கியதா? இறக்கப்பட்ட அந்தவசனம் எது? அந்த வசனத்தின் சட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தினார்கள்? என்பதையெல்லாம் சஹாபாக்கள் நன்கறிந்தி ருந்தார்கள்.
அவ்வாறே, நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு ஹதீஸையும் புரிந்துவைத்திருந்தார்கள்.இந்த ஹதீஸை யாருக்காக, எந்த சந்தர்ப்பத்தில், எந்த விளக்கத்திற்காக, என்ன நோக்கத்திற் காக நபிகளார் சொன்னார்கள். ஒரு காரியத்தை எதற்காக அங்கீகரித்தார்கள் அல்லது எதற்காக தடைசெய்தார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் தடை செய்து விட்டு பிறகு அனுமதித்த ஹதீஸ்கள் எவை என்பது பற்றியும் அறிந் திருந்தார்கள்.
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவுக்கு சஹாபாக்களே நேரடிசாட்சியாளர்களாவர். சஹா பாக்களை நீக்கி விட்டு குர்ஆன் சுன்னாவை படிக்கமுடியாது. சுன்னாவை மறுத்து விட்டு மார்க்கத்தை விளங்கமுடியாது. மார்க்கத்தின் பூரண அறிவைப் பெற்றவர்களாக, நேர்மை யானவர்களாக சஹாபாக்கள் திகழ்ந்தார்கள்.
சஹாபாக்களுக்கு தெரியாத எந்தவொரு ஈமானும் இல்லை. இபாதத்தும் இல்லை.
இமாம் ஷாபீய்(ரஹ்) இப்படி கூறுகிறார்கள்.:
நபித்தோழர்களை அல்லாஹ் குர்ஆனிலும் தவ்ராத் இன்ஜீலிலும் புகழ்ந்துரைத்துள்ளான். நபி(ஸல்) அவர்களின் நாவினால் அவர்களுடைய சிறப்பைபற்றி கூறியுள்ளான் அவர் களுக்குப் பின்னர் வந்த எவருக்கும் இச்சிறப்பு கிடையாது. அல்லாஹ் அவர்கள் மீது அருள் புரிந்து அவர்களுக்கு "சித்தீகின்கள் ஷூஹதாக்கள் சாலிஹீன்கள்'' என்ற உயர் அந்தஸ்தை வழங்கி வாழ்த்தியுள்ளான்.
அவர்கள் நபிகளாரின் சுன்னாக்களை எமக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். வஹி நபிகளாருக்கு இறங்கிக் கொண்டிருப்பதை நேரடி யாகக் கண்டார்கள. நபிகளார் பொதுவாகவும் குறிப்பாகவும் உறுதியாகவும் வழிகாட்ட லாகவும் எதை நாடினார்கள் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். எமக்கு தெரிந்தும் தெரியாத சுன்னாக்களையும அவர்கள் அறிந்திருந்தார்கள். அறிவிலும் (தேடலிலும்) இஜ்தி ஹாதிலும் பேணுதலிலும் புத்திக் கூர்மையிலும் எதிலிருந்து கல்வியை பெறவேண்டும் என்பதிலும் எதிலிருந்து சட்டம் பெறவேண்டும் என்பதிலும் எம்மைவிட அவர்கள் மேலான வர்கள். எங்களின் கருத்துக்களை விட அவர்களுடைய கருத்துக்கள் புகழுக்குரியதும் முதன்மைகுறியதாகும். ((நூல்: மனாகிபுஷ் ஷாபீய் லில் பைஹகீ (1/ 442)
சஹாபாக்கள் தான் இந்த மர்க்கத்தை முழுமையாக புரிந்தவர்களும் அதனை இந்த மண்ணில் நிலை நாட்டியவர்களுமாவர். நீதமானநேர்மையான சமூகமாக அல்லாஹ் அவர்களை ஆக்கி மார்க்கத்தை எத்திவைக்கும் பணியையும் அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள் தான் இந்த மார்க்கத்தின் முதலாவது தூதர்களாவர்.
அவர்கள் மூலமாகவே ஏனைய மக்களுக்கு மார்க்கம் சென்றடைந்தது. அவர்கள் மூலமாக எமக்கு கிடைத்த குர்ஆனையும் சுன்னாவையும் நம்பிக்கை கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவர்கள் புரிந்து கொண்ட புரிதல் (ஈமானியவிளக்கம்) அவசியமாகும். அவர்கள் நம்பிக்கை கொண்ட பிரகாரம் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு பின்பற்ற வேண்டும். அநத நம்பிக்கைக்கு மாற்றமாக எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நியதியை அல்லாஹ்தான் ஏற்படுத்தினான்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
23/05/2026
“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நூலின் முதல் பிரதிகள் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்
Bandaranaike Memorial International Conference Hall இல் 2026 மே 02 அன்று நடைபெற்ற “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நூல் வெளியீட்டு விழா அறிவியல், தஃவா மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலித்த அரிய நிகழ்வாக அமைந்தது.
இந்த விழாவில் மூத்த உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அவர்களது முன்னிலையில் “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நூலின் முதல் பிரதிகள் மரியாதையுடன் வழங்கப்பட்டன.
இந்த நூல், தூய்மையான இஸ்லாமிய மன்ஹஜை தெளிவாக எடுத்துரைப்பதுடன், சமுதாயத்தில் அறிவு, ஒற்றுமை மற்றும் சரியான வழிகாட்டலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
20/05/2026
තව්හීද් ඉතිහාසය සහ මන්හජ් පිළිබඳ හැඳින්වීමේ දේශනය (සිංහල භාෂා දේශනය)
Moulavi Mahir T. D. Ramdeen
History of Thowheed & Introduction to Manhaj
(Sinhala Language Speech)
தவ்ஹீத் வரலாறு மற்றும் மன்ஹஜ்ஜின் அறிமுக உரை
15/05/2026
தவ்ஹீத் சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்தல்
தவ்ஹீத் சமூகத்தினர் மீது சுமத்தப்படும் வீணான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தக் கட்டுரை காலத்தின் தேவையாகும்.
கலாநிதி முபாரக் மதனி அவர்களின் உரை தவ்ஹீத் சமூகத்தின் உண்மையான முகத்தை நாட்டுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இக்கட்டுரையின் சிறப்பம்சங்களாவன;
● இந்த நாட்டுக்கு மிகப்பெரிய அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்தவர்கள் தவ்ஹீத் சமூகத்தினரே என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளது.
● சுனாமி, வெள்ள நிவாரணம், இரத்த தான முகாம்கள் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் போன்ற தவ்ஹீத் சமூகத்தின் பாரிய சமூகப் பணிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது.
● தவ்ஹீத்வாதிகள் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவது அரசியல் சூழ்ச்சியே தவிர, அதில் உண்மையில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
மன்ஹஜுஸ் ஸஹீஹ் உறுப்பினராக எனது பார்வை
மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலாநிதி முபாரக் மதனி அவர்கள் ஆற்றிய இந்த உரை எமது நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது.
☆ பாதுகாப்புத் துறையினரோ அல்லது புலனாய்வுத் துறையினரோ உங்களை அணுகினால், மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூலை அவர்களிடம் கையளித்து எமது கொள்கையைத் தெளிவுபடுத்துங்கள். நாம் நாட்டுக்கு எதிராக எவ்விதத் தீமையையும் செய்யாதவர்கள்.
தவ்ஹீத் சமூகம் இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைகளை அரசாங்கமும் மக்களும் உணர்ந்து கொள்ள இக்கட்டுரை ஒரு சிறந்த ஆவணமாக அமையும்.
Al Manhajus Saheeh
14/05/2026
BMICH கொழும்பில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நூல் வெளியீட்டு நிகழ்வில், இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலமாக்கள், தொழிலதிபர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
இது அறிவு, தஃவா மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
மேலும் விபரங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளைப் பெற எங்களின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தை Follow செய்யுங்கள்.
https://web.facebook.com/almanhajussaheeh/
# ManhajBook
13/05/2026
அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் – BMICH நிகழ்வின் நினைவுகள்
அல்ஹம்துலில்லாஹ், கடந்த மே 2, 2026 அன்று BMICH இல் மிகச் சிறப்பாக நடைபெற்ற “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” நிகழ்வின் சில நினைவுப்படங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மதிப்பிற்குரிய உலமாக்கள், அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். BMICH வளாகத்திற்கு வருகை தந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கு வழிகாட்டும் பணிகளும் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டன.
📸 சில நினைவுக் காட்சிகள்…