Hatalea Tamil Vidyaalayam

Hatalea Tamil Vidyaalayam

Share

பன்விலை கோட்டத்தின் சிறந்த சிறுவர் ந

22/06/2026
20/06/2026

வத்தேகம வலயத்தின் பன்விலை கோட்டத்தின்
ஹாத்தலை மண்ணின் சரித்திர சாதனை

கல்வி வானில் சுடரொளிரும் ஆத்தலை தமிழ் வித்தியாலயத்திற்கு மகுட வாழ்த்துகள்!

"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" என்ற வாக்குக்கமைய, ஹாத்தலை மண்ணின் கல்வி வரலாற்றில் நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர், ஒரு பொற்கால விடியல்.

பெருவெற்றிக்குத் துணையாய் நின்ற
அதிபர் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள், இருள் நீக்கும் ஒளியாய், சோர்வுறும் போதெல்லாம் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாய், மாணவர்களின் அறியாமை அகற்றி, அவர்களைச் சாதனையாளர்களாகச் செதுக்கிய அத்தனை ஆசான்களுக்கும்
வறுமையையும் சவால்களையும் கடந்து, பிள்ளைகளின் உயர்வையே தங்களின் வாழ்நாள் கனவாகக் கொண்டு, இரவும் பகலும் துணையாய் நின்ற பெற்றோர்களின் தியாகத்திற்கும்
மகத்தான நன்றிகள் .

ஹாத்தலை வித்தியாலயத்தின் இந்த வெற்றிக் தீபம், வெறும் பரீட்சைப் பெறுபேறுகளோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் போற்றும் உன்னத ஆளுமைகளையும், தலைவர்களையும் உருவாக்கும் பேராற்றலாகத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம். மாணவச் செல்வங்களின் எதிர்காலக் கல்விப் பயணம் இன்னும் பல சிகரங்களைத் தொட எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
வெற்றி நடை போடும் ஹாத்தலை தமிழ் வித்தியாலயம் என்றும் புகழோடும் அசைக்க முடியாத பெருமையோடும் மிளிரட்டும்! 🎓✨💐

Photos from Hatalea Tamil Vidyaalayam's post 20/06/2026
Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kandy